திருபுக்குழி மேல்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் பள்ளி மாணவர்கள் மோதலா?
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே பள்ளி மாணவ, மாணவிகள் மது அருந்துவது, பேருந்து நிலையத்தில் சண்டையிடுவது, ஆசிரியரை தரக்குறைவாக பேசுவது அவர்களை அடிக்க முயல்வது போன்ற சம்பவங்கள் வீடியோக்களாக வெளியாகி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கை கட்டுப்படுத்த முடியாமல் ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறையும் திணறி வருகிறது. இதற்கிடையே பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த திருப்புக்குழி பகுதியில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து பயின்று வருகின்றனர்.
இதுபோன்ற நிலையில் இன்று மாலை மேல்நிலை மாணவர்கள் பள்ளி அறிவியல் ஆய்வகத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கண்டு பொருட்களை சேதப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் பள்ளிக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் உள்ள பாலுசெட்டி காவல்நிலையத்தில் புகார் கூட தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
பள்ளி மாணவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட கல்வி அலுவலரிடமோ அல்லது அருகிலுள்ள காவல் ஆய்வாளரிடம் தெரிவித்து, பள்ளி மாணவர்களுக்கு போதிய உளவியல் ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் அவர்களை தீய பழக்கங்களில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
காவல்துறை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியும், இது போன்ற நிகழ்வுகள் பெற்றோர்களிடையே மட்டுமல்லாமல் கல்வி ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu