/* */

காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்த்தி துவக்கினார்

காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பேரணியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்த்தி துவக்கினார்
X

காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன அதிகாரிகள்.

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக காஞ்சிபுரத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் தனியார் தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலரும், பொதுமக்களுக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் , சங்கரா கலைக்கல்லூரி, திருமலை பொறியியல் கல்லூரி, அன்னை தொழிற் கல்லூரி மாணவிகள் என கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் துவக்கி வைத்தார்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு பேரணியில் ஆட்சியர் கலந்துகொண்டார். பேரணி பூக்கடை சத்திரம், கிழக்கு ராஜவீதி, அன்னை இந்திரா காந்தி சாலை, காமராஜர் சாலை வழியாக தாலுகா அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. வழியெங்கிலும் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து காஞ்சிபுரம் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்றுவோம் என உறுதிமொழி எடுத்தனர்.

இந்த பேரணியில், ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் பிரேம் ஆனந்த் மற்றும் தனியார் கலைக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என 5௦௦ க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Updated On: 13 Jun 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  8. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  10. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...