களக்காட்டூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு..!
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பழமரக்கன்றுகள் நடவு செய்யும் பயனாளிகளுக்கு ஆணை வழங்கிய எம்எல்ஏ சுந்தர் மற்றும் ஓன்றியக்குழுதலைவர் மலர்கொடி குமார் மற்றும் காவலூர் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் மக்களுடன் முதல்வர் சேவை நிகழ்ச்சியில் 38 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் வழங்கினார். இம்முகாமில் 5 கிராம ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்து பதிவு செய்து கொண்டனர்.
மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி தமிழக முழுவதும் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 54 ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாலாஜாபாத் வட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட களக்காட்டூர் பகுதியில் மாகரல், ஆர்ப்பாக்கம், காலூர், கீழ்பெரமல்லூர் களக்காட்டூர் ஆகிய ஐந்து ஊராட்சிகளில் உள்ளடக்கிய பொதுமக்கள் தங்கள் மனுக்களை மக்களுடன் முதல்வர் நிகழ்வில் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு, ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி தலைமையில் நடைபெற்றது.
இதில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, சமூக நலத்துறை, காவல்துறை, கால்நடை , வேளாண்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்து கொண்டு இரண்டு நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் 12 அவர்களுக்கு வீடுகளை பழுது பார்க்கும் பணி ஆணை, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் இரண்டு நபர்களுக்கு ஒதுக்கீடு ஆணை, புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த நபருக்கு உடனடி இணைப்பிற்கான ஆணை என பல்வேறு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன், வட்டாட்சியர் கருணாகரன், ஒன்றிய குழு துணை தலைவர் இளமது, வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா, ஒன்றிய செயலாளர் குமணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நளினி டில்லிபாபு, சகுந்தலா சங்கர், மேத்தா ஞானசேகரன், தயாளன் , களக்காட்டூர் ஊராட்சி துணைத்தலைவர் பாலாஜி , திமுக நிர்வாகிகள் ராஜகோபால், திருநாவுக்கரசு, தட்சிணாமூர்த்தி, வீரராகவன், கதிரவன் , சீனுவாசன் மற்றும் பல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu