சரியான வேலை கிடைக்காதால், வழிப்பறி செய்து சிக்கிய இளைஞர்.
நகை திருடி கைதான வாசுதேவன்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள காந்திநகர் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு பட்டபகலில் மூதாட்டியிடம் 12 சவரன் செயின் பறிப்பு ஈடுபட்ட இளைஞனை சிசிடிவி காட்சி கொண்டு காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ளது காந்திநகர் பகுதி. இப்பகுதியில் வங்கிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை துணை அலுவலகங்கள் என அமைந்துள்ள பகுதியாகும்.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குணசுந்தரி(60). காலை 10 மணியளவில் குணசுந்தரையின் தங்கையின் பேரன் முதலாவது பிறந்தநாள் விழாவிற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண பார்ட்டி ஹாலில் விழாவிற்கு வந்தார்.
அப்போது வீட்டிலிருந்தே இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த இரண்டு தங்க சங்கிலி 12 சவரன் நகை அறுத்து விட்டு தப்பியோடினார். செயின் பறித்த பொழுது மூதாட்டி கீழே விழுந்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இத்தகவல் அறிந்து வந்த தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த், சார்பு ஆய்வாளர் துளசி உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை உடன் சென்ற நபர் மற்றும் அப்பகுதியினரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை கைப்பற்றி மர்ம நபரை தேடி வந்தனர்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காஞ்சிபுரம் அடுத்த திருபருத்திகுன்றம் பகுதியை சேர்ந்த வாசுதேவன்(27) என்பவர் என தெரியவந்தது. இவரை கைது செய்து இவரிடம் இருந்த நகை பணம் மற்றும் இருசக்கர வாகனங்கள் செய்து தாலுக்கா காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், வாசுதேவன் பெயிண்டர் தொழில் செய்து வந்ததாகவும், பொங்கல் பண்டிகை வரும் நிலையில் உரிய வேலை கிடைக்காததால் பண்டிகை கொண்டாட்டத்திற்கு பணம் தேவைப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் முதல் முறையாக ஈடுபட்டதாக கூறியுள்ளார். சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது, அதை சிறந்த முறையில் கொண்டாடவும் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி தற்போது நல்ல நிலைமையில் உள்ளதாகவும் , ஓரிரு நாளில் வீடு திரும்புவார் எனவும் தெரிய வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu