சூப்பர் மார்க்கெட்டில் சோப்பு திருடிய வாலிபரின் சி.சி.டி.வி காட்சி வைரல்

சூப்பர் மார்க்கெட்டில் சோப்பு திருடிய வாலிபரின் சி.சி.டி.வி காட்சி வைரல்
X

காஞ்சிபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த சோப்பை திருடி சென்ற வாலிபரின் புகைப்படம்.

காஞ்சிபுரம் சூப்பர் மார்க்கெட்டில் சோப்பை தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்த நபரின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் சோப்பு திருடும் நபர் அதனை திருடி தனது ஆடைக்குள் மறைத்து எடுத்து செல்லும் சி.சி.டி.வி. காட்சி சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் தேவகி சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் சூப்பர் மார்கெட்டில் சுற்று வட்டார மக்கள் ஏராளமானோர் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வர்.

இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த ஒரு நபர் பொருட்களை வாங்குவது போல சுற்றி சுற்றி வந்துள்ளார். சூப்பர் மார்க்கெட்டிங் பல்வேறு பகுதியில் சுற்றித்திரிந்த நபர் குளியலறை சோப்புகள் உள்ள பகுதியில் சென்று அங்கிருந்த சோப்புகளை எடுத்து தான் அணிந்திருந்த பேண்டுக்குள் மறைத்து வைத்து எடுத்துச் செல்லும் சி.சி.டி.வி .காட்சிகள் வைரலாகி வருகிறது.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூப்பர் மார்கெட் பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்களை சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு குற்ற சம்பவங்களை தற்போது சிசிடிவி காட்சிகள் காட்டி கொடுத்து வரும் நிலையில் , வீடுகள் கடைகள் மற்றும் பல்வேறு விதமான சாலையில் சி.சி.டி.வி. பொருத்தப்பட்டிருந்தாலும் சோப்பின் விலை ரூபாய் 50 க்கு குறைவான நிலையில் அதனை எடுத்து செல்லும் அவல நிலையும், அதை காட்டிக் கொடுத்த சி.சி.டி.வி. காட்சியால் தற்போது அவரின் மனநிலை மற்றும் அதனைப் பார்த்து அவரது உறவினர்கள் அவரைப் பார்க்கும்போது நினைவுக்கு வரும் இந்த காட்சிகளும், நீங்காமல் மனதை நெருடி கொண்டே இருக்கும் என்பதை அறியாமல் இதனை மேற்கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!