சிசிடிவி கேமராவை திசை திருப்பி கைவரிசை: பலே கொள்ளையன் கைது

கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒரு ஊமை என்பதால் சிறப்பு ஆசிரியை உதவி கொண்டு புலனாய்வு செய்ததால் குற்றம் ஒப்புக்கொள்ளபட்டது.

HIGHLIGHTS

சிசிடிவி கேமராவை திசை திருப்பி கைவரிசை: பலே கொள்ளையன் கைது
X

லாப நோக்கத்துடன் குற்றம் செய்த குற்றவாளி கோபி.

காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஷ்ணு நகர் பகுதியில் 22 .01 .2023ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு நாய் தொடர்ச்சியாக குறைத்ததால் வீட்டின் உரிமையாளர் சிசிடிவி காட்சி கொண்டு பார்க்க முயன்ற போது, திடீரென சிசிடிவி காட்சிகள் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அறிந்து , அருகில் இருந்த மற்றொரு குடியிருப்பு நபரிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்த போது, வீட்டின் சிசிடிவி கேமராக்கள் பேப்பர் கொண்டு மறைக்கப்பட்டும் , திசை திருப்பி விட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து நாய் குறைத்து வந்ததால் திருட வந்த குற்றவாளி உடனடியாக அங்கிருந்து சென்ற நிலையில் சிசிடிவி காட்சிகளை வீட்டின் உரிமையாளர் ஆராய்ந்ததில் அதில் ஒரு நபர் வீட்டில் திருட முயன்றுள்ளார் .

இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.சிசிடிவி ஃபுட்டேஜ் அடிப்படையாக கொண்டு காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையில் புகார் அளித்தனர் பேரில் வழக்கு பதிவு செய்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவுப்படி, காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் மேற்பார்வையில், மேற்படி நபரை காஞ்சி தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர்கள் துளசி, செந்தில்குமார்; திரு செல்ல பிள்ளை மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் வெஸ்லி மற்றும் முதல் நிலை காவலர் நாகராஜன் முதல் நிலை காவலர் ரமேஷ் ஆகியோர் தேடி வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் காஞ்சிபுரம் கோட்டைமேடு வேகவதி நகர் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகனான கோபி தெரியவந்தது . இவர் பிறவிலிருந்தே பேச இயலாத நிலையில் உள்ளதும் தெரிய வந்தது.

இவரிடம் விசாரணை மேற்கொள்ள உதவியாக காஞ்சிபுரம் செவித்திறன் குறை உடையோர் அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி காயத்ரி தேவி அவர்களை அழைத்து மொழிபெயர்ப்பு செய்ததில் எதிரி லாப நோக்கத்தோடு கொலை (murder for gain) செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

மேலும் 2021 ஆம் ஆண்டு திருகாலிமேட்டில் நடைபெற்ற தாலுகா காவல் நிலையம் நீண்ட மாதங்களாக கண்டுபிடிக்கப்படாத வழக்கு எண்1568/21 u/S380,392@302ipc murder for gain வழக்கு சம்பவத்தை மேற்படி அவர்கள் ஒத்துழைப்போடு விசாரணை மேற்கொண்டு வழக்கின் சொத்துக்களை கைப்பற்றி எதிரியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது.

அவரிடமிருந்து 71 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி கைப்பற்றப்பட்டது

கேமராக்களை திசை திருப்பி கொள்ளை அடிப்பதில் கில்லாடி என்பதும் தெரியவந்துள்ளது.

Updated On: 24 Jan 2023 4:15 PM GMT

Related News

Latest News

 1. ஈரோடு
  பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஈரோடு ஆட்சியர்...
 2. லைஃப்ஸ்டைல்
  Happy Birthday Anni Quotes In Tamil பிறந்த நாள் நம் வாழ்வினை ...
 3. லைஃப்ஸ்டைல்
  Plant Based Diet in Tamil- இதய நோயாளிகளை பாதுகாக்க உதவும் தாவர...
 4. ஈரோடு
  ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் நாளை 57வது ஆண்டு விளையாட்டு விழா
 5. அரசியல்
  மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்: பிரதமர்
 6. கோயம்புத்தூர்
  கோவையில் மார்ச் 9-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
 7. உசிலம்பட்டி
  பிரதமர் மோடிக்கு எதிராக உசிலம்பட்டி அருகே விவசாயிகள் போராட்டம்
 8. வீடியோ
  Modi செய்த செயல் அதிர்ச்சியடைந்த Annamalai !#annamalai #annamalaiips...
 9. ஈரோடு
  கோபி அருகே இளம் வயது திருமண எதிர்ப்பு, கோடை வெப்பம் விழிப்புணர்வு...
 10. ஈரோடு
  ஸ்டாலின் முதல்வரானது ஒரு அரசியல் விபத்து: முன்னாள் அமைச்சர் கருப்பணன்...