சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகள்: மூன்றாவது முறையாக மாநகராட்சி பறிமுதல்

சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பறிமுதல் செய்து வாகனங்களில் ஏற்றும் மாநகராட்சி ஊழியர்கள்.
காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை விடக்கூடாது என பலமுறை எச்சரித்தும் அதை அலட்சியப்படுத்திய கால்நடை உரிமையாளர்களின் போக்கினை மாற்று முகமாக மூன்றாவது முறையாக மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரிந்த பத்து கால்நடைகளை பறிமுதல் செய்தும் , ஒரு கால்நடைக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்தும் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
காஞ்சிபுரம் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகரினுள் கால்நடைகள் சுற்றி திரிவதால் வாகன விபத்துகளில் பொது மக்கள் உயிர் இழந்தும் மற்றும் உடல் உறுப்புகளை இழந்து வருவதாக கடும் குற்றம் சாட்டி வந்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தின் போது இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 12ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி என சாலைகளில் சுற்றி திரிந்த 15 மாடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு திருவண்ணாமலை பகுதியில் உள்ள கோசலையில் ஒப்படைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று மூன்றாவது முறையாக காஞ்சிபுரம் கரிக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, காமராஜர் சாலை பல்லவர்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை மாநகராட்சி குழுவினர் காலை 6 மணி முதல் பிடித்து பறிமுதல் செய்தனர்.
அப்போது எனது மாட்டை விடுவிக்க கூறிய ஒரு பெண் அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சி அழுதது பெரும் நெருடலை ஏற்படுத்தியது.
இதே போல் ஒரு வெள்ளை பசு ஒன்று தன்னுடன் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து செல்வதை கண்டு வாகனத்தை சுற்றி வந்தது. பிடிக்கும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் தோல்வி அடைந்தனர்.
இன்று 10 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டும், ஒரு கால்நடைக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக மாணநகராட்சி தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும், சுற்றித் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து இன்று பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu