காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடைகள், நாய்கள் தொல்லை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்நடைகள், நாய்கள் தொல்லை
X

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை அச்சுறுத்தும்  நாய்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடைகள் மற்றும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் ஊழியர்கள் அவதிப்படுகிறார்கள்.

கடந்த பல வருடங்களாகவே கால்நடைகள் மற்றும் நாய்களால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்து கொண்டே வருகிறது. மாநில சாலைகள் கிராம சாலைகள் தெருவீதிகள் என அனைத்திலும் கால்நடைகள் தற்போது சுற்றி திரிகின்றன.

மேலும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வாலாஜாபாத் - ஓரகடம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் இரவு நேரங்களில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து படுத்து உள்ள நிலையில் தொழிற்சாலைகளில் இருந்து பணிபுரிந்து வீடு திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகளையும், உயிரிழப்புகளை இழந்து குடும்பத்தினரை மீளா துயரில் ஆழ்த்துகின்றன.

கடந்த மாதம் சென்னையில் சாலையில் வந்து கொண்டிருந்த இளம் பெண்ணை மாடு முட்டி பலத்த காயத்துடன் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றார். இதேபோல் பல்வேறு பகுதிகளில் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் குழந்தைகளை குதறும் காட்சியும் பெண்களை விரட்டும் காட்சிகளும் பார்க்கவே அச்சத்துடன் செய்திகளிலும் காண்பிக்கப்படுகிறது.

இந்நிலைகளில் மாநகராட்சி நகராட்சிகளில் தெருவில் சுற்றித் திரியும் நாய் மற்றும் கால்நடைகளை பிடிக்க அறிவுறுத்தியதின் பெயரில் அவ்வப்போது இச்செயலும் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியில் அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தலைமை துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தலைமை துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது . இது மட்டுமில்லாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் இவ்வளாத்தில் அமைந்துள்ளதால் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அரசு ஊழியர்கள் என பயணித்து வருகின்றனர்.

மேலும் காலை மற்றும் மாலை வேலைகளில் இளையோர் முதல் மூத்தோர் வரை நடை பயிற்சி மேற்கொண்டும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக காணப்பட்டு நடைபெற பயிற்சி மேற்கொள்ளும் மக்கள், அரசு ஊழியர்கள் என பலர் அச்சத்துடனே செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாநகராட்சி உரிய ஆலோசனைகளை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. இன்று தொடர்ச்சியாக இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள் தொல்லை தந்து வந்ததால் நடை பயிற்சி மேற்கொண்டோர் பாதியிலேயே திரும்பும் நிலையும் ஏற்பட்டது.

Tags

Next Story