காஞ்சிபுரம் அருகே காணாமல் போன இளைஞர் ஓடை பகுதியில் சடலமாக மீட்பு

காஞ்சிபுரம் அருகே காணாமல் போன இளைஞர்  ஓடை பகுதியில் சடலமாக மீட்பு
X

கொலை செய்யப்பட்ட தனுஷ்.

காஞ்சிபுரம் அடுத்த ஐயம்பேட்டை பகுதியில் காணாமல் போன இளைஞர் ஓடை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ருத்ரகோட்டி. இவருக்கு தனுஷ் என்ற மகன் இளங்கலை பட்டப் படிப்பு படித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி இரவு கடைக்கு செல்வதாக கூறி சென்ற தனுஷ் மாயமானார்.

இவரது பெற்றோர்கள் உறவினர்கள் என பல இடங்களில் தேடி வந்த நிலையில் காணவில்லை என வாலாஜாபாத் காவல் நிலையத்தில் கடந்த ஏழாம் தேதி புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காணவில்லை என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரது தொலைபேசி மற்றும் நண்பர்களிடையே காவல்துறை விசாரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அய்யம்பேட்டை அடுத்த கோயம்பாக்கம் ஆற்று ஓடைப்பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் கால் மட்டும் தெரிந்த நிலையில் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் வருவாய் துறைக்கு தெரிவித்தனர்.

இதனை எடுத்து வருவாய்த்துறை வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் புதைந்திருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வாலாஜாபாத் காவல் துறையினர் விசாரணை பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு வந்தனர்.

மேலும் காணாமல் போன அய்யம்பேட்டையை சேர்ந்த தனுஷ் என்பவராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அவரது அடையாளங்களை தெரிவிக்குமாறும் நேரில் வருமாறும் அழைத்தனர்.

அதன் பேரில் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் என அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை பார்த்த நிலையில் அது தனுஷ் என உறுதி செய்தனர்.

காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாறிய நிலையில் இதுகுறித்து அப்பகுதியில் காவல் துறை விசாரணை மேற்கொண்டு சந்தேகம் உள்ள இரண்டு நபர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் அவரது நண்பர்கள் இதை செய்திருக்க கூடும் என கூறப்படுகிறது.

காவல்துறை முழு விசாரணைக்கு பிறகு இது குறித்த தகவல் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன நபர் ஆற்று மணலில் புதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story