குடிநீர் விநியோகத்தில் தடை: உடனடியாக பணிகளை துவங்கிய மாநகராட்சி

குடிநீர் வழங்கல் பணி தடையினை சரி செய்யும் ஊழியர்கள்
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகரம் மற்றும் விரிவு படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் சேர்த்து நாள்தோறும் பல லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாலாறு மற்றும் பல்வேறு ஆற்றுப்படுகைகளில் இருந்து பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தீபாவளி பண்டிகை நாள் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என வந்துள்ள நிலையில் பொதுமக்களின் நீர் தேவைகள் அதிகரித்துள்ளது.
மேலும் இன்று காலை முதல் சங்கர மடம் ஏகாம்பரநாதர் கோயில் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மாநகராட்சி குடிநீர் வழங்கல் பணி தடை ஏற்பட்டுள்ளதாக மேயருக்கு தொடர் புகார்கள் வந்தது.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்களை உடனடியாக இது குறித்து பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தியும் சங்கர மனம் பகுதியில் செயல்படும் குடிநீர் விநியோக வால்வு செயல்பாட்டினை ஆய்வு செய்ய உதவி செயற் பொறியாளருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில் பணிகள் துவங்கிய நிலையில் மேயர் மகாலட்சுமி உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அப்பகுதியில் செயல்பட்டிருந்த வால்வு பழுதாகி இருந்தால் உடனடியாக அதனை மாற்றி குடிநீர் விநியோக செய்ய அறிவுறுத்தினார்.
மேலும் தொடர்ந்து பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் வருவதால் குடிநீர் வழங்கல் பணிகளை அந்தந்த பகுதி ஊழியர்கள் முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் ஏதேனும் தடை ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதி பொதுமக்களுக்கும் மாநகராட்சி தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu