காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாஜகவின் ஒரே வேட்பாளர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாஜகவின் ஒரே வேட்பாளர்
X

பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற பாஜக வேட்பாளர் நாகலிங்கம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விப்பேடு ஒன்றிய குழு உறுப்பினராக பாஜக சார்பில் ஒரு உறுப்பினர் தேர்வு

காஞ்சிபுரம் ஒன்றியம் 11 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர்கள் பாஜக வேட்பாளர் 2494 வாக்குகள், திமுக 2200 வாக்குகள் பெற்றதால், பாஜக 294 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் ஒன்றியம் விஷார் ஊராட்சிக்கு உட்பட்ட 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக அக்கட்சியின் வேட்பாளர் நாகலிங்கம் போட்டியிட்டார். இவருக்கு எதிராக திமுக வேட்பாளர் தசரதன் களமிறங்கினார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் நாகலிங்கம் திமுக வேட்பாளரை விட 294 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் என்ற சாதனையை படைத்தார்.

Tags

Next Story