அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும்! பாஜக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்!

மகளிர் உரிமைத் துறை சார்பில் மகளிர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அனைத்து மகளிர்க்கும், மகளிர் உரிமைத்தொகை வழங்காத திமுக அரசியல் மாவட்ட பிஜேபி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர்க்கும் , மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அவ்வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தமிழக முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஒரு லட்சம் மகளிர்க்கு இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இதில் பல்வேறு குளறுபடிகளும் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளதாக கூறி பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் நேரடியாக முதல்வரிடமே சென்றதைத் தொடர்ந்து, விடுபட்ட மகளிர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்தப்படியே, அனைத்து மகளிர்க்கும் வழங்க வேண்டும் என கூறி இன்று பாஜக மகளிர் அணி சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மாநில மகளிர் அணி தலைவி சுமதி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக பின்பற்றாமல் திமுக நிர்வாகிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது ஏழை எளிய மக்களுக்கு பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் பாஜக மாவட்ட தலைவர் பாபு , நிர்வாகிகளான ஜீவானந்தம் , வாசன் , ருத்திரகுமார், செந்தில்குமார் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் எல்லம்மாள் குணா ,காயத்திரி மற்றும் பல்வேறு பிரிவு பாஜக நிர்வாகிகள் என பல கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !