சொத்து வரி உயர்வை கண்டித்து காஞ்சி மாவட்ட பாஜக ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து காஞ்சி மாவட்ட பாஜக ஆர்ப்பாட்டம்
X

சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் காஞ்சிபுரம் காவலன் கேட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

சொத்துவரி உயர்வை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் பாஜக செய்தி தொடர்பாளர் திருப்பதிநாரயணன் தலைமையில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில், மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை கண்டித்து, காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில், மாவட்ட தலைவர் கே எஸ் பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கலந்து கொண்டார். மக்களை பாதிக்கும் சொத்து வரியை திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

நகரக் கட்டமைப்பு மற்றும் சிறந்த சேவைகள் செய்யவே வரிகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையானால் கூட, அதை மத்திய அரசு கூறிதான் மாநில அரசு செயல்படுவதாக கூறுவது தவறான விஷயம் எனவும், மாநில அரசு விஷயங்களில் ஒருபோதும் பாஜக அரசு தலையிடாது எனவும், ஒவ்வொரு மாநகராட்சியின் வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் எனவும் தெரிவித்தார். பொதுமக்களை வஞ்சிக்கும் இந்த சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெறும் வகையில் மாநில அரசு செயல்படும் வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி