சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜ முன்னிலை: காஞ்சிபுரத்தில் கட்சியினர் கொண்டாட்டம்
சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் பாஜவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்தியாவில் உத்திரபிரதேசம், கோவா, ஜார்கண்ட், மணிப்பூர், மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு துவங்கிய நிலையில் 9 மணி முதல் முண்ணனி நிலவரம் வர துவங்கியது. இதில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களிலும் பாஜ பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்று வருகிறது.
குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சியாக செயல்பட்டு வந்த பாஜ 407 இடங்களில் 270க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதேபோல் பிற 3 மாநிலங்களிலும் அதிக பெரும்பான்மை பெற்ற கட்சியாக முன்னணி வகித்து வருகிறது. இதை நாடு முழுவதும் உள்ள பாஜ தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் நகர பாஜ தலைவர் அதிசயம்குமார் மற்றும் நகரமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் தனலஷ்மிகுமார் தலைமையில் அண்ணா அரங்கம் அருகே பட்டாசுகள் வெடித்து வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக பிரமுகர்கள் கூரம் விஸ்வநாதன், ஜீவானந்தம், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu