காஞ்சிபுரத்தில் 3 மாநில வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய பா.ஜ.க.வினர்

காஞ்சிபுரத்தில் 3 மாநில வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய பா.ஜ.க.வினர்
X

மூன்று மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் பாபு தலைமையில் நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினர்.

3 மாநிலங்களில் அதிக பெரும்பான்மையுடன் பா.ஜ.க .வெற்றி பெற்றதையொட்டி காஞ்சிபுரத்தில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

3 மாநில தேர்தல் வெற்றியை காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே பா.ஜ.க. அலுவலகத்தில் பா.ஜ.க.வினர்வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.


பா.ஜ.க. வெற்றியை நோக்கி முன்னிலையில் உள்ளதால் காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க.வினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அலுவலகத்தின் முன்பு சாலையில் வெடி வெடித்து கொண்டாடி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், உத்திரமேரூர், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பா.ஜ.க.வினர் பட்டாசுகள் வெடித்து தேர்தல் வெற்றியை தொண்டர்களுடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அம் மாநில பா.ஜ.க. தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story