நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் பீர் பாட்டில் குத்து: ஒருவர் உயிரிழப்பு

நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட வினித்குமார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் நேரு நகர் பகுதி சேர்ந்தவர் வினித் குமார் (27). கடந்த ஓராண்டுகளுக்கு முன் வாலாஜாபாத் பேரூராட்சியில் தினக்கூலி பணியில் இருந்துள்ளார். தற்போது தினக்கூலிக்கு பல்வேறு பணிகளுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் தனது நண்பர் பார்த்திபனுடன் நேரு நகர் பால்வாடி அருகே மது அருந்தி பேசிக் கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கு வந்த பார்த்திபன் நண்பர் ஆட்டோ ஓட்டுனரான சின்னராஜ் பார்த்திபனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதில் மோதல் முற்றிய நிலையில் மது பாட்டிலை உடைத்து வினித் குமார் கழுத்து பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் சின்ராஜ் குத்தியும் , கழுத்தை அறுத்துள்ளார்.
பலத்த ரத்தம் வெளியேறிய நிலையில் கூறிய வினித்குமார் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு , 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது , அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வினித் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பார்த்திபன் மற்றும் சின்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை வினித் குமார் தனது கர்ப்பமான மனைவியை பார்க்க கேரளா செல்ல வேண்டிய நிலையில் நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சம்பவம் அக்குடும்பத்தினரையும், அப்பகுதியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கூடா நட்பு கேடாய் விளையும் என்பதும் நள்ளிரவில் தாண்டியும் மது அருந்தும் பழக்கத்தை இளைஞர்கள் மேற்கொண்டு வருவது தங்களை மட்டும் இல்லாமல் தங்கள் குடும்பத்தினரையும் மீளா துயரத்தில் ஆழ்த்தும் என்பதை ஏனோ அறியாமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழைய காவல் நிலையம் அப்பகுதி அருகே இருந்த நிலையில் அப்பகுதியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத நிலையில் காவல் நிலையம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டதால் , இளைஞர்கள் பொது இடங்களில் அதிக நேரம் மது அருந்துவது மற்றும் பேசிக் கொண்டிருப்பது என செலவிட்டு வருவதாகவும் அப்பகுதியினர் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu