/* */

காஞ்சிபுரத்தில் இருந்து இரு மாவட்டங்களுக்கு 2950 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

காஞ்சிபுரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து புதுக்கோட்டை  மாவட்டத்திற்கு 1280 இயந்திரங்களும் , நாமக்கல் மாவட்டத்திற்கு 1670 இயந்திரங்களும் அனுப்பப்பட்டது

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் இருந்து இரு மாவட்டங்களுக்கு 2950 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
X

காஞ்சிபுரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து இரு மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியின் போது ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கலைச்செல்வி 

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-னை முன்னிட்டு, இன்று (02.04.2024) காஞ்சிபுரம் செவிலிமேட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பிரித்து வழங்கப்பட்டது.

நடைபெறுகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-னை முன்னிட்டு புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து வழங்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று காஞ்சிபுரம் செவிலிமேடு கிராமத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து புதுகோட்டை மாவட்டத்திற்கு 1280 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் நாமக்கல் மாவட்டத்திற்கு 1670 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பிரித்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், தொடர்பு அலுவலர்/சிறப்பு மாவட்ட அலுவலர் (நில எடுப்பு) சென்னை கன்னியாகுமரி தொழிற்வழி தட திட்டம் இராமமூர்த்தி, காஞ்சிபுரம் தேர்தல் வட்டாட்சியர் தாண்டவம் மூர்த்தி , புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 3 April 2024 1:45 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
 2. லைஃப்ஸ்டைல்
  அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
 3. லைஃப்ஸ்டைல்
  எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
 4. லைஃப்ஸ்டைல்
  மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
 5. மானாமதுரை
  வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
 6. லைஃப்ஸ்டைல்
  அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
 8. குமாரபாளையம்
  பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
 9. லைஃப்ஸ்டைல்
  நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...