செல்போன் பயன்பாட்டை குறைக்க கோரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செல்போன் பயன்பாட்டை குறைக்க கோரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
Awareness Program -செல்போன் பயன்பாட்டை குறைக்க கோரி மாணவ, மாணவிகள் காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

Awareness Program -பொதுமக்கள் செல்போன் பயன்பாட்டினை குறைக்க கோரி கல்லூரி மாணவர்கள் நடனமாடி மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி காஞ்சியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் சிறுவர் முதல் முதியவர் வரை செல்போன் பயன்படுத்தாதது பெருமளவில் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. கொரோனா காலகட்டத்தில் பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் செல்போன் பயன்பாட்டை துவக்கி விட்டனர். பள்ளி நேரம் போக மீதி நேரம் அதை பல்வேறு காரணங்களை கூறி நாள் ஒன்றுக்கு 15 மணி நேரத்திற்கு மேல் அதில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

இளைஞர்களோ தங்களை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்திக் கொள்ள இதனை பயன்படுத்தி பல்வேறு சிக்கல்களிலும் சிக்கி பல்வேறு நிலைகளில் சிக்கி வருகின்றனர். ஓய்வு பெற்ற முதியோர்களோ தங்கள் ஓய்வு நேரங்களை பக்தி மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் பிற செய்திகள் அவர்களும் பார்க்கத் தொடங்கி அதில் சிக்கி விட்டனர்.

அரசு ஊழியர்கள் தங்களது அதிகாரிகளின் கூட்டங்களை செல்போன் வழியாக நடத்தி அதன் மூலம் அவர்களும் அதற்கு அடிமையாகி விட்டார்கள் இப்படி பல வகைகளில் செல்போனை தவிர்க்க முடியாமல் அதற்கு அடிமையாக அதனைத் தவிர்க்க இயலாமல் தவிர்த்து வருவதை நம்மால் உணர முடிகிறது.

செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் ஏற்படும் உடல்நல , மனநல பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதிக நவீன டிஜிட்டல் பயன்பாட்டில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது குறித்தும் மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி முதுநிலை இதழியல் துறை சார்பில் சென்னை , புறநகர் பகுதிகளில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


அவ்வகையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியார் நினைவு தூண் அருகே இன்று 12 மணியளவில் நடை பெற்றது.இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அதிகரித்து வரும் செல்போன் பயன்பாடுகளால் ஏற்படும் உடல் நல மற்றும் மனநல பாதிப்பு குறித்து நூதனமாக நடனமாடி நாடகம் மூலம் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புதுமையான நூதன விழிப்புணர்வு நடனத்தை பார்வையிட்டும் கண்டும் மகிழ்ந்தனர். மேலும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வரவேற்று உற்சாகப்படுத்தும் விதமாக கைத்தட்டியும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததும் மாணவர்களுக்கு பெரிதும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும் தகவல்கள் பரிமாற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தி விலைமதிப்பில்லா உயிரிழப்பையும் தவிர்க்க கோரி பல்வேறு குறு நாடங்களும் நடத்தப்பட்டது. காஞ்சியில் பிரதான சாலைகளில் நடத்தப்பட்டதால் அவ்வழியாக சென்ற பொதுமக்களும் தங்களது வாகனங்களை நிறுத்தி இதன் கருத்துக்களைக் கேட்டு தற்போதைய சூழலில் இது தேவையான ஒன்று என கூறி கல்லூரி மாணவ மாணவிகளை பொதுமக்கள் பாராட்டியும் வாழ்த்தியும் சென்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story