காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டுநர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாலை பாதுகாப்பு குறித்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் பரந்தூர் சாலையில் அமைந்துள்ள வேலம்மாள் போதி பள்ளியில் நேற்று இரண்டு மணி நேரம் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கான சாலை விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் எடுத்துரைத்து ஏற்படுத்தினார்.
இதில் ஓட்டுநருக்கு வாகன பராமரிப்பு சாலை விதிகள் மற்றும் மாணவர்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் குறித்த பாதுகாப்பு குறித்து காணொளி மூலம் விளக்கத்தில் எடுத்துரைத்தார். இதில் பள்ளி வாகன உதவியாளரும் இடம் பெற்றிருந்தனர்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணம் எவ்வாறு செய்வது என்பது தலைக்கவசம் சாலையை கடப்பது , சாலை விதிகள் குறித்து எடுத்துரைத்தார் இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் , ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu