வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற 3 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கல்

வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற  3 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கல்
X

பணி நியமன ஆணையை வழங்கும் அமைச்சர் அன்பரசன்.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் சார்பில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது அரசு தேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.

இதற்காக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு அவ்வப்போது பல்வேறு பணி நிலைகளுக்கு ஏற்ப போட்டி தேர்வுகளை கூட்டியே அறிவித்து, விண்ணப்பங்கள் பெற்று தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறும் நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறது.

தற்போது அதிக அளவில் பட்டதாரிகள் உள்ள நிலையில் போட்டி தேர்விற்கு பல லட்சம் பேர் விண்ணப்பித்து, அதில் தேர்வு பெற்று பணி நியமங்களை பெற்று வருகின்றனர். இதற்காக பல்வேறு நகரங்களில் நடைபெறும் பயிற்சி மையங்களில் இணைந்து தொடர்ந்து பயிற்சிகளை பெற்று பல்வேறு நிலை தேர்வுகளையும் எழுதி வெற்றி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஏழை, எளிய மாணவர்கள் பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்தி சேர இயலாத நிலையை அரசு கவனத்தில் கொண்டு, தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அலுவலகங்கள் சார்பாக போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அரசு போட்டி தேர்வு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் நபர்கள் அதிக அளவில் அரசு பணிகளை பெற்று வருவதாக அறிந்த மாணவர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து தங்கி காஞ்சியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் பேரில் , இதனை இணை இயக்குனர் அருணகிரி மேற்பார்வையில் பல்வேறு பேராசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்கள் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து பாடப் புத்தகங்களும் அங்குள்ள நூலகத்தில் வைக்கப்பட்டு 24 மணி நேரம் படிக்கும் வசதியும் இந்த அலுவலகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

இதில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் இளைஞர்களும், பெண்களும் தங்களது ஓய்வு நேரத்தில் பயிலும் வசதியும் இங்கு தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில் இங்கு 250 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் இணைந்து பயன்பெற்று வருகின்றனர்.

அவ்வகையில் கடந்த ஜூலை மாதம் டிஎன்பிசி நிலை இரண்டு மற்றும் இரண்டு ஏ - வில் இங்கு பயிற்சி பெற்ற 12 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமன ஆணை பெற்றனர்.

இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்ற தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் சென்னை தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற பேரவையில் தட்டச்சராக பணி நியமனம் பெற்ற மூன்று நபர்களுக்கு பணி ஆணை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய இணை இயக்குனர் அருணகிரி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!