ஆற்பாக்கம் : ஆருத்ரா விழாவையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆற்பாக்கம் : ஆருத்ரா விழாவையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
X

ஆருத்ரா விழாவினையொட்டி, திருவாலீஸ்வரர் திருக்கோயிலில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள சிவன் கோயில்களில், ஆருத்ராவினையொட்டி நடராஜப் பெருமானுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். இத்திருநாளில் சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறும்.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள திருநல்லழகி உடனுறை திருவாலீஸ்வரர் திருக்கோயிலில், நடராஜப் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை ஒட்டி சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது பக்தர்களுக்கு விபூதி, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture