கலைஞர் நூற்றாண்டு விழா : காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இலவச திருமணம்
திருமணம் நடைபெற்ற பின் மணமக்கள் எம்எல்ஏ சுந்தர் மற்றும் எம்பி செல்வம் மற்றும் செவிலிமேடு மோகன்
கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி நரிக்குறவர் இன மணமக்களுக்கு இலவச திருமணத்தை எம்எல்ஏ சுந்தர் நடத்தி வைத்து ரூ 1.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை, திருமண விருந்து வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட முழுவதும் 100 ஏழை எளிய குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 4 வது மண்டல குழு தலைவரும், ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட அமைப்பாளருமான செவிலிமேடுமோகன் ஏற்பாட்டின் பேரில் குருவிமலை பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன தம்பதிகள் ஆன மேஷாக் - கீர்த்தனா அவர்களுக்கு இன்று திமுக சார்பில் இலவச திருமணத்தை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் இணைந்து நடத்தி வைத்தனர்.
முதலில் கிறிஸ்தவ முறைப்படி உறுதிமொழி ஏற்று, பைபிளை மணமக்கள் பரிமாற்றி கொண்ட பின்பு, எம் எல் ஏ சுந்தர் மற்றும் எம்.பி செல்வம் மலர் மாலை எடுத்து தர, தம்பதிகள் இருவரும் மலர் மாலை மாற்றிக் கொண்ட நிலையில் மணமக்களை அனைவரும் வாழ்த்தினர்
விழாவில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பேசியாவது, தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் நரிக்குறவர் மக்களுக்கு ஏராளமான நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நரிக்குறவர் இனத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அதில் வெற்றி கண்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் நரிக்குறவர் என மாணவ மாணவிகளுக்கு பழங்குடியினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருவது பெருத்த வெற்றி எனவும் இதன் மூலம் அவர்கள் தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்து விளங்க முடியும் என தெரிவித்தார்.
திருமண தம்பதிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் கட்டில் , மெத்தை , பீரோ தொலைக்காட்சி பெட்டி மற்றும் சமையல் பாத்திரங்கள் என அனைத்தும் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.திருமண விழாவில் மணமக்கள் மற்றும் இரு குடும்பத்தினருக்கும் திருமண விருந்தாக பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் குமணன், ஒன்றிய குழு உறுப்பினர் பரசுராமன், களக்காட்டூர் டில்லிபாபு , ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலாஜி, திமுக நிர்வாகிகள் களக்காட்டூர் ராஜகோபால் தட்சிணாமூர்த்தி , ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன், சபை போதகர் யூதா உள்ளிட்ட பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu