காஞ்சிபுரத்தில் ஆ.ராசா உருவபொம்மை எரிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் தரக்குறைவாக திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியதா கூறி, காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் ஆ.ராசாவின் உருவபொம்மையை எரித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக மகளிரணியினர் சார்பில் இன்று காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பிறப்பு குறித்து தரக்குறைவாக பேசிய ராசாவை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மைதிலிதிருநாவுக்கரசு , மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம் , மகளிர் அணியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர்.இந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்டனர்.

அவர்கள் ராசாவின் உருவ பொம்மையை எரித்தும், துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் அடித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். ராசாவை கைது செய்யக்கோரி கோரிக்கையும் விடுத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!