அரசு தேர்வில் சிறப்பிடம் பெற்ற 80 பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டி பரிசளிப்பு
அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கும் சிறப்பு விருந்தினர் டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார்.
தமிழ்நாடு தொண்டை மண்டல வேளாளர் சமுதாய சங்க காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பொதுக்குழு கூட்டம் மற்றும் 80 பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசளிப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு தொண்டை மண்டல வேளாளர் சமுதாய நல சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் அரசு தேர்வில் சிறப்பிடம் பிடித்த 80 பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டி பரிசளிப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
இப்பொதுக் குழு கூட்டத்தில் செயலாளர் சந்திரசேகரன் ஆண்டறிக்கையும் , அதனைத் தொடர்ந்து பொருளாளர் பாலாஜி நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர்.
இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சர்வதேச வேளாளர் சங்க நிறுவனரும் , லைப் லைன் மருத்துவ குழும மேலாண்மை இயக்குனர் டாக்டர். ராஜ்குமார் மற்றும் முதல் குரல் செய்தி நிறுவன ஆசிரியர் ரவீந்திரன், கௌரவ தலைவர் புத்தளி ஞானசேகரன் உள்ளிட்டோர் , சங்க எதிர்கால வளர்ச்சி திட்டம் மற்றும் வருங்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மாணவ மாணவிகளுக்கு கல்வி ஆலோசனை வழங்குதல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் சாதனைகள் புரிந்த 80 மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக 3000 இரண்டாம் பரிசாக 2000 மூன்றாம் பரிசாக ஆயிரம் என அளிக்கப்பட்டு சான்றிதழ் கேடயங்களும் வழங்கப்பட்டது.
மேலும் லைப் லைன் மருத்துவமனை சார்பில் இலவசமாக சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் ராஜ்குமார் அறிவித்து, அனைவரும் உடல் நலனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து மற்றும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu