பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல்வர் அறையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் , பேராசிரியர்கள் , அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பேரறிஞர் அண்ணா என அன்பாக எல்லாராலும் அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை கடந்த 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் காஞ்சிபுரத்தில் பிறந்தார். பட்டப் படிப்புகள் படித்து தென்னாட்டின் பெர்னாட்ஷா என அனைவராலும் புகழப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தி.மு.க. ,அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கொண்டாடி வருகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அனைத்து கட்சி பிரமுகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.அவ்வகையில் பேரறிஞர் அண்ணா பயின்ற பச்சையப்பன் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் அறையில் பேரறிஞர் அண்ணா அமர்ந்திருப்பது போல் ஆளுயர அவரது திருவுருவப் படத்திற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் முருகக்கூத்தன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் , மாணவர்கள் என பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதே போல் பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளியில் அவரது திருவுருவப்படம் வைக்கப்பட்டு தலைமை ஆசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் தூவி மரியாதை செலுத்தினர்.

காஞ்சிபுரம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக, அதிமுக கட்சியின் கொடிக்கம்பங்களில் அண்ணாவின் திருவுருவ படம் வைக்கப்பட்டு மலர்மாலை சூட்டி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
how to bring ai in agriculture