அமைச்சர் , எம்எல்ஏக்கள் அண்ணா சிலைக்கு மரியாதை

அமைச்சர் , எம்எல்ஏக்கள் அண்ணா சிலைக்கு மரியாதை
X
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அண்ணா நினைவு இல்லத்திலுள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் , சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் , சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஊரக தொழிற்துறை அமைச்சரும் , ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா மோ அன்பரசன் இன்று காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்.

காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் , எழிலரசன் ஆகியோருடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

அதன் பின்பு காஞ்சிபுரம் மாவட்ட கழக அலுவலகத்தில் அமைக்கபட்டிருந்த அண்ணா மற்றும் கலைஞர் ஆளுயர சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர

அதேபோல் முன்னாள் திமுக அமைச்சர் சி,வி.எம். அண்ணாமலை மற்றும் அவரது மகன் சி.வி.எம்.அ..பொன்மொழி ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று அவர்களின் திருவுறுவ படத்திற்கும் அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அமிவித்து மரியாதை செலுத்திளர். இந்நிகழ்ச்சியில் ஏரளாமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!