காஞ்சிபுரத்தில் சாெத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக நகர்ப்புற அமைச்சர் கே என் நேரு தமிழகத்தில் அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் உள்ள குடியிருப்புகளில் சொத்து வரியை 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படும் என அறிவித்தார்.
இதனால் குடியிருப்புவாசிகள் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என பலர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கண்டனங்களை எழுப்பினர். இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் இன்று மாவட்ட தலைநகரங்களில் வீட்டு வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.சோமசந்தரம் மற்றும் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி, திருநாவுக்கரசு மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனி, காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி வீட்டு வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu