அதிமுக‌ ஓருங்கிணைப்பாளர்கள் தேர்வு: காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

அதிமுக‌ ஓருங்கிணைப்பாளர்கள் தேர்வு: காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்
X

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பேரணி பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வு. காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் சென்னை தலைமை கழக அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் பொறுப்பாளர் அறிவித்திருந்தார்.

அதன்படி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் பொறுப்பாளர் அறிவித்தார்.

இதனை கொண்டாடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பேரணி பகுதியில் மாவட்ட செயலாளர் வீ.சோமசுந்தரம் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், ஓன்றியசெயலாளர் ஜீவானந்தம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், நகரசெயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட நகர, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ரமணர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture