காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
X
காஞ்சிபுரம் அடுத்த காரை பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் அழகரசன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் அழகரசன். இவர் சமூக சேவை மற்றும் கழிவுப் பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் தனது குடோனில் இருந்தபோது திடீரென மர்ம நபர்கள் புகுந்து அவரை சரமாரியாக தலையில் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அவருடன் இருந்த நபர் அளித்த தகவல் பேரில் அங்கு வந்த அவரது உறவினர்கள் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காஞ்சி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொழில் சம்பந்தமாக ஏதேனும் முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!