பொதுச் செயலாளராக எடப்பாடி : தங்கத்தேர் இழுத்து அதிமுகவினர் கொண்டாட்டம்

பொதுச் செயலாளராக எடப்பாடி : தங்கத்தேர் இழுத்து அதிமுகவினர் கொண்டாட்டம்
X

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி நீண்ட ஆயுளுடன் வாழ காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் தங்கத்தேர் இழுத்து அதிமுகவினர் கொண்டாட்டம்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்பாள் திருக்கோயிலில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தங்கத்தேர் இழுத்தனர்

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்பாள் திருக்கோயிலில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தங்கத்தேர் இழுத்து காஞ்சி மாவட்ட அதிமுகவினர் கொண்டாட்டம்..

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பு வெளியான நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக அதிமுக நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை அதிமுகவினர் பெரிதும் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தங்க ரத பவனி நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் மற்றும் கோகுல இந்திரா தலைமையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தங்கத்தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் எழுந்துள்ள அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன் மைதிலி திருநாவுக்கரசு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வடம் பிடித்து கோயில் வளாகத்தை வலம் வந்தனர்.

இறுதியாக அவர்களுக்கு சிறப்பு மரியாதை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு சக்கரை பொங்கல் புளியோதரை உள்ளிட்ட அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட ஆயுளுடன் அதிமுகவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில் பாடுபடுவோம் என தெரிவித்தனர்.


இதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிமுக பகுதி கழக செயலாளரும் , பெரிய காஞ்சிபுரம் டவுன் பேங்க் தலைவருமான பாலாஜி தலைமையில் கோடையை முன்னிட்டு பொது மக்களுக்கு பழரசம் மோர் உள்ளிட்ட குளிர்பானங்களும், சூட்டை தவிர்க்கும் தர்பூசணி கிர்ணி பழம் வெள்ளரிப்பிஞ்சு , இளநீர் , நுங்கு உள்ளிட்ட பழங்களையும் வழங்கும் விழா நடைபெற்றது.

இதனை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு , மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!