ஆதிதிராவிடர், பழங்குடி இளைஞர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணிஆணை வழங்கபட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கான மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, துவக்கி வைத்தார்.
முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:
இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துக்காண்டு 8 முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் படித்து வேலை நாடுபவர்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுகிறார்கள்.
மேலும், அரசு வேலை மட்டுமே நம்பி இருக்காமல் தனியார் நிறுவனங்கள் மற்றும் சுயத்தொழில் செய்து இளைஞர்கள் முன்னேற வேண்டும் என அரசு பல்வேறு வேலை வாய்ப்பு பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
அதில் இளைஞர்கள் கலந்துக்கொண்டு தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் அருணகிரி, ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் .கு.பிரகாஷ் வேலு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu