காஞ்சிபுரத்தில் துவங்கிய இரண்டு நாள் விவசாய கண்காட்சி
காஞ்சிபுரத்தில் நடைபெறும் இரண்டு நாள் விவசாய கண்காட்சி துவக்க விழாவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழும முதன்மை நிர்வாகி கு.ப. செந்தில்குமார் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை அளித்தார்.
காஞ்சிபுரத்தில் தமிழக இலவச பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் விவசாயிகள் திருவிழா பொருட்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்விக் குழுமம் நிர்வாக இயக்குனர் கு.ப.செந்தில்குமார் துவக்கி வைத்து பாரம்பரிய நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
தமிழக இலவச பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் இரண்டு நாள் விவசாயிகள் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதல் நாள் நிகழ்வினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழுமங்களில் நிர்வாக இயக்குனர் கு.ப.செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்வினை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கண்காட்சியினை பார்வையிட்டும் அதில் வைக்கப்பட்டிருந்த பொருட்களின் விவரங்களையும் கேட்டறிந்தார்.
விவசாயிகளின் பாரம்பரிய நெல் விதைகள், விவசாயத்துக்கு உபயோகப்படும் உபகரணங்கள் மற்றும் சொட்டு நீர் பாசன முறைகள் , மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் மற்றும் முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டதை கண்டு ரசித்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் , விவசாய பிரதிநிதிகள் , இயற்கை ஆர்வலர்கள் தங்கள் அனுபவங்களை சிறப்பு நிகழ்வுகள் மூலம் கலந்துரையாடல் செய்ய உள்ளனர். நாளை இரண்டாம் நாள் நிகழ்வில் தமிழக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொள்ள உள்ளதாகவும், தெரிய வருகிறது.
கண்காட்சியில் இயற்கை உணவுகள், இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட ஆபரண பொருட்கள், இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட மூலிகை தைலங்கள் என அனைத்தும் கண்காட்சி படுத்தப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் காஞ்சிபுரத்தின் பாரம்பரிய வரலாறு மற்றும் ஓவிய கண்காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu