மாமல்லபுரம் அருகே இயற்கையை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய மணல் சிற்ப கலைஞர்

மாமல்லபுரம் அருகே இயற்கையை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய மணல் சிற்ப கலைஞர்
X

பசுமை காப்போம் இயற்கையை காப்போம் என விழிப்புணர்வு வாசகம் எழுதி வரையப்பட்ட மணல் சிற்பம்.

மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதி கடற்கரையில் சிற்ப கலைஞர் கஜேந்திரன் வரைந்த சிற்பம் பொதுமக்களின் பாராட்டை பெற்றது.

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி மாமல்லபுரம் அருகே இயற்கை காப்போம்.. பசுமை காப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாண்டா கிளாஸ் மணல் சிற்பம் வரைந்து மணல் சிற்பக் கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் , கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் மணல் சிற்பக் கலைஞராக பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சி , இயற்கை விழிப்புணர்வுகள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு மணல் சிற்பங்கள் மூலம் உருவங்கள் அமைத்து பணி புரிவதில் சிறப்பு வாய்ந்தவர்.


இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் , தொடர் விடுமுறை காரணமாக மாமல்லபுரம் , கிழக்குக் கடற்கரை சாலையில் அதிகளவில் பொதுமக்கள் தங்கள் பொழுதுகளை கழிக்க விரும்பும் இடமாக அமையும்.

இந்நிலையில் பசுமை காப்போம் இயற்கையை காப்போம்*.. என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில் உள்ள கடற்கரையில் , சாண்டாகிளாஸ் உருவம் அமைத்து அதில் பசுமை காப்போம் இயற்கை காப்போம் என வாசகங்கள் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

கஜேந்திரன் தனது உதவியாளர் தினகரனுடன் இணைந்து இன்று காலை 9மணிக்கு இப்பணியை துவக்கி மாலை 4 மணிக்கு நிறைவு செய்துள்ளார். பணி செய்யும் நேரத்திலேயே பல்வேறு பொதுமக்கள் கடற்கரைக்கு வந்த நிலையில் இந்த மணல் சிற்பங்களைக் கண்டு புகைப்படம் எடுத்தும் அவரது இயற்கை குறித்த ஆர்வத்தை பாராட்டியும் சென்றுள்ளனர்.

தொடர்ச்சியாக 7 மணி நேரம் முயற்சி மேற்கொண்டு இந்த மணல் சிற்பத்தை உருவாக்கியதாக சிற்பக் கலைஞர் கஜேந்திரன் தெரிவித்தார்.

Tags

Next Story