டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த கூட்டம் டி ஆர் பாலு எம்பி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்குழு ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மக்கள் நல்வாழ்வு துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் துறை, கல்வித் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சாரத் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளில் ஒன்றிய அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெறுகின்றதா என்பதை ஆய்வு செய்ததுடன் பல்வேறு துறைகள் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பணிகளை உரிய காலத்தில் முடிக்க தெரிவிக்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இக்குழு கூட்டத் தலைவருமான டி ஆர் பாலு , பொதுமக்களுக்கு செய்யப்படும் வளர்ச்சிப் பணிகளை அரசு விதிகளுக்கு உட்பட்டும் , தொய்வின்றி குறித்த காலத்தில் செய்தல் அவசியம் என்பதும், முறைகேடுகள் இருப்பின் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் நித்தியா சுகுமார் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu