100-வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற ஆசிரியை

100-வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த காஞ்சிபுரம் ஓய்வு பெற்ற ஆசிரியை
X

காஞ்சிபுரத்தில் 100வது பிறந்தநாளை கொண்டாடிய ஓய்வுபெற்ற ஆசிரியை பாக்கியவதிடேவிட்..

காஞ்சிபுரத்தில் 100-வது பிறந்த நாளை ஓய்வு பெற்ற ஆசிரியை கொண்டாடி மகிழ்ந்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் , மெஞ்ஞானபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் டேவிட் ஜாஸ்வா. இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற அவில்தர் பிரிவு ராணுவ வீரர் ஆவார். அதன் பின் பணி நிறைவு பெற்று காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் 1951 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், புதுவாயல் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியவதி என்பவரை திருமணம் செய்து கொண்டு காஞ்சியில் வசித்து வந்தார். பாக்கியவதி டேவிட் 1952 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் நகராட்சியின் கீழ் இயங்கும் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.

தொடர்ந்து 40 ஆண்டுகால ஆசிரியர் பணியில் அனைத்து மதப் பிரிவுகளைசேர்ந்த குழந்தைகளையும் தனது குழந்தை போல் கல்வி கற்க செய்து பலரை நல்லொழுக்கத்துடன் உருவாக்கியுள்ளார். இவருக்கு ஒரு மகள் , இரண்டு மகன் என்று வாழ்ந்து வந்த நிலையில் அவரது கணவர் மரணத்திற்கு பின்பு தனது குழந்தைகளுடன் இன்று வரை வசித்து வருகிறார்.

தற்போது அவருக்கு நூறு வயது ஆரம்பிப்பதையொட்டி அவருக்கு பிறந்தநாள் விழா நடத்த அவரது மகள் மகன்கள் மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்து இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் பாக்கியவதி டேவிட்டின் நூறாவது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சி.எஸ்.ஐ .ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மேடையில் 100 வயதை ஆரம்பிக்கும் நாளை ஒட்டிய கேக்கினை வெட்டி அனைவருக்கும் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவரது சகோதரர் , குடும்பத்தினர்கள் என அனைவரும் அவரிடம் ஆசி பெற்றனர்.

அதன்பின் அவரிடம் கல்வி பயின்று தற்போது ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்கள், பொறியாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், அருகில் வசிக்கும் குடும்பத்தினர் என பலர் அவருக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

விழாவிற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சற்றும் தளராது அமர்ந்து அனைவருக்கும் நல்லாசி வழங்கிய அவரின் உடல் வலிமை மற்றும் செயலை அனைவரும் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.

ஆசிரியை பாக்கியதேவிடேவிட் குறித்து பேசிய அனைவரும் , அன்பாகவும், அதேநேரம் நல்லொழுக்கத்துடன் அனைவரிடம் பழகியவர் என்பதை தனது பேச்சில் குறிப்பிட்டனர்.

மேலும் ஆசிரியர் பாக்கியதேவிடேவிட்டின் கடந்த கால புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவரின் வயதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டு, அதன் பின்னணிகளை அவரது மகன் அனைவருக்கும் எடுத்துரைத்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது நூறு வயது கடந்தவர்களை பார்ப்பது அரிதான நிலையில் இவரின் செயல்களினை கண்டு நாம் அதனை பின்பற்றி நலமுடன் வாழ்வோம்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!