காஞ்சிபுரத்தில் இரு பெண் குழந்தைகளை அநாதையாக விட்டுச் சென்ற தாய்

காஞ்சிபுரத்தில் இரு பெண் குழந்தைகளை அநாதையாக விட்டுச் சென்ற தாய்
X

காஞ்சிபுரம் போலீசார் வெளியிட்ட சி.சி.டி.வி. பதிவு.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இரு பெண் குழந்தைகளை அனாதையாக விட்டுச் சென்ற தாயை போலீசார் சிசிடிவி பதிவு மூலம் தேடி வருகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் இரு பெண் குழந்தைகளை அனாதையாக விட்டுச் சென்ற பெண்மணி குறித்து ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காததால் திணறி வரும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த மாதம் 14ஆம் தேதி காஞ்சிபுரம் மாநகராட்சி வைகுண்ட பெருமாள் கோவில் முதல் தெருவில் பெற்றோர் யாரும் இன்றி தனியாக நின்று அழுது கொண்டிருந்த இரு பெண் குழந்தைகளை அந்த பகுதியில் உள்ளவர்கள் அளித்த தகவலின் பெயரில் சிவகாஞ்சி போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்களது பெயர் தீக்ஷிகா (வயது 4), ஹேரிக்கா (வயது 3 )என்றும் அப்பா பெயர் சதீஷ், அம்மா பெயர் ரம்யா, பாட்டியின் பெயர் அமுதா, தாத்தா பெயர் ஆறுமுகம் என்றும் தங்கள் ஊர் வேலூர் என தெரிவித்தனர்.மேலும் தனது அம்மா ரம்யா உடன் வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஆலோசனையின் பேரில் குழந்தைகள் இருவரையும் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஹோலி அப்பாஸ்தலஸ் குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு குழந்தைகளையும் தவிக்க விட்டுச் சென்ற பெண்மணி குறித்து பஸ் நிலையம் மற்றும் பங்க் கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கண்டறிந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் .

ஒரு மாதம் ஆகியும் குழந்தைகளை தவிக்க விட்டுச் சென்ற பெண்மணி குறித்து எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போலீசார் சி.சி.டி.வி .காட்சிகளையும் பெண் குழந்தைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களையும் வெளியிட்டு உள்ளனர்.

ஒரு மாதம் ஆகிய நிலையில் குழந்தைகளை தவிக்க விட்டுச் சென்ற பெண்மணியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?