காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்

காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் வாகனத்தை நிலை நிறுத்தும்போது விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் அருகே சரக்கு வாகன ரயில் பின்னோக்கி வருகையில் விபத்தில் சிக்கியது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் இருந்து இரும்பு கம்பிகள் மற்றும் இரும்பு உருளைகள் ஏற்றிக்கொண்டு 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் வாகனம் காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையத்திற்கு வருகை புரிந்தது.
காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வாகனத்தை நிலை நிறுத்த பின்னோக்கி செங்கல்பட்டு பாதையில் செயல்பட்ட போது திடீர் விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த மரம் மற்றும் தடம் மாறி சென்றதால் தண்டவாளங்கள் பெயர்ந்து விபத்து ஏற்பட்டது.
விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் ஏதுமில்லை.இரண்டு இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது.ஒவ்வொரு பெட்டியிலும் சுமார் 60 டன் எடை கொண்ட இரும்பு கம்பிகள் உள்ளது என தெரிய வருகிறது.
இதுகுறித்து தென்னக ரயில்வே சென்னை கோட்டம், காஞ்சிபுரம் நிரந்தர வழி தட பொறியாளர் சஞ்சீவி தெரிவிக்கையில் , இரும்பு உருளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்திலிருந்த கார்டு மற்றும் ஓட்டுநர் இடையே தகவல் தொடர்பு பரிமாற்றம் துண்டிப்பு காரணமாகவே இந்த விபத்து நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறி உள்ளார்.
விபத்து குறித்து அறிந்த தென்னக ரயில்வே துறை உயர் அதிகாரிகள் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து ஜேசிபி உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் சாலை போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
சம்பவ இடத்தினை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , வருவாய் கோட்டாட்சியர் , காவல்துறையினர் என பலர் உடனிருந்து மீட்பு பணிக்கு ஆலோசனை கூறி உதவினர்.
சம்பவ இடத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu