உத்திரமேரூர் அருகே ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் வங்கியில் தீ விபத்து
பெருநகர் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கி கிளை.
ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பெருநகர் இந்தியன் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. காசாளர் அறை , ஏசி மின்விசிறிகள், உள்ளிட்டவை மட்டுமே சேதமடைந்தது..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகரில் இயங்கி வருகிறது அலகாபாத் வங்கி. இது தற்போது இந்தியன் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் இளநகர் , கூழமந்தல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களது நகை கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் உள்ளிட்ட ஏராளமான திட்டத்தின் கீழ் கடன் பெற்று தங்களது பணத்தை வைப்பு தொகையாக செலுத்தி பயன்பெற்று வருகின்றனர்.
வழக்கம்போல் நேற்று வங்கி ஊழியர்கள் மாலை பணி முடிந்து அனைத்தையும் பூட்டிவிட்டு சென்ற நிலையில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென வங்கி அலாரம் ஒலிக்க துவங்கியது.
இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள், காவல்துறை மற்றும் வங்கி மேலாளருக்கு தெரிவித்த நிலையில், திடீரென வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், உடனடியாக வங்கியில் சென்று தீ பரவாமல் தீ தடுப்பு பணியினை மேற்கொண்டனர்.
பணிகள் நிறைவுற்ற பின் ஆய்வு செய்ததில் காசாளர் அறையில் இருந்த சிறிய பணம் என்னும் இயந்திரம் அங்குள்ள கணினி ஏசி மற்றும் மின்விசிறிகள் உபயோக பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகியது கண்டறியப்பட்டது.
வாடிக்கையாளர்கள் விவரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள் என அனைத்தும் எவ்வித சேதம் இன்றி இருந்த நிலையில் அதனை உடனடியாக அப்பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து பெருநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே தீ விபத்து நடந்தது என முதல் கட்டத்தில் தெரியவந்துள்ளது. மேலும் வங்கி அலுவலகத்தின் மின் இணைப்பினை மின்வாரியம் துண்டித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu