காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றம்

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றம்
X

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம்  இன்று மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகள் உள்ளன. இவை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை தெரு விளக்கு, பாதாள சாக்கடை, குப்பைகளை கையாளுதல் உள்ளிட்ட சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் அவ்வப்போது மனுக்களாக பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

கூட்டம் துவங்குவதற்கு முன்பாக சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வளத்தோட்டம் பகுதியில் நடைபெற்ற வெடி விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்பின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் திருக்குறளை மேயர் மகாலட்சுமி யுவராஜ் வாசிக்க அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

இதன்பின் இம்மாத கூட்டத்திற்கான 97 தீர்மானங்கள் ஒவ்வொன்றாக அலுவலரால் வாசிக்க அதில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் மகாலட்சுமியுவராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பதில் அளித்தனர் .

மாமன்ற உறுப்பினர்களால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் அதிகளவில் புகார் தெரிவிப்பதாகவும் , அதற்காக விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்த நிலையில் பதில் அளித்த மேயர் சுகாதாரத்துறை தலைவர் பதிலளிக்க கூடிய நிலையில் , மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சங்கர் கூறுகையில் , காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பான் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதாகவும், விரைவில் கொள்முதல் செய்யப்பட்டு மாதம் இருமுறை ஒவ்வொரு வார்டுகளிலும் இரண்டு முறை பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மாமன்ற உறுப்பினர் சண்முகானந்தம் கூறுகையில் , பிள்ளையார் பாளையம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 400 மாணவ மாணவிகள் பயின்று வரும் இரு கழிவறைகளை உள்ளதாகவும் இது சுகாதார சீர்கேடு விளைவிக்கும் என்றும் , விரைவாக கூடுதல் கழிப்பறைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் சில உறுப்பினர்கள் சாலை வசதி மழை நீர் வடிகால் வசதி உள்ளிட்ட வெயில் கோரிக்கையில் பணி குழு தலைவர் சுரேஷ் கூறுகையில் , காஞ்சிபுரம் மாநகராட்சி தற்போது மார்ச் மாதம் என்பதால் வரி வசூலில் தீவிரமாக இருப்பதாகவும் இப்பணத்தைக் கொண்டு வளர்ச்சி பணிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே பல்வேறு வகைகள் நமக்கு 30 கோடி ரூபாய் அளவில் பணம் வருவாய் வர தாமதம் ஏற்படுத்துவதாகவும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் வைத்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

காந்தி சாலையில் உள்ள தனியார் பட்டு நிறுவனம் வரி செலுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கட்டிட உரிமை பெற்றுள்ளதா என்பதை மீண்டும் ஆய்வு செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை குறித்து அ.தி.மு.க. உறுப்பினர் பேசுகையில் தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுவாகவே மாமன்ற கூட்டம் நடைபெறும் நிலையில் மாமன்ற உறுப்பினர்களுக்கு காபி , இனிப்புகள் வழங்குவது வழக்கம். தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் இதனுடன் சேர்த்து தயிர்வடை வழங்கி கோடை வெப்பத்தை தணித்தனர்.

Updated On: 24 March 2023 3:09 PM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...