/* */

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 மாணவ , மாணவியர்கள் காயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 மாணவ மாணவிகள் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 மாணவ , மாணவியர்கள் காயம்
X

காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றச் சென்ற தனியார் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிகழ்வில் 9 பள்ளிக் குழந்தைகளுக்கு சிறு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் தெருவில் உள்ள ஸ்ரீ நாராயண குரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு காஞ்சிபுரம் மட்டுமில்லாது சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பல நூறு பள்ளி மாணவர்கள் நாள்தோறும் கல்வி கற்க பள்ளி பேருந்துகள் மூலம் வந்து செல்கின்றனர்

இந்நிலையில் இன்று பள்ளி முடிந்த பின் ராஜகுலம் பகுதியில் பள்ளி மாணவர்களை இறக்கி விட சென்ற தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர் தெய்வசிகாமணி என்பவர் ஓட்டி சென்றார். அதில் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப சென்ற போது எதிர்பாராத விதமாக ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இதில் பேருந்தில் பயணித்த 22 மாணவ மாணவிகளில் 9பேருக்கு சிறு காயம் ஏற்பட்டது

1) தருண்குமார் (13)

2) ஹரிகுமார்(09)

3) தனலட்சுமி (14)

4) ரித்திஷ்(09)

5) ஜெயஸ்ரீ(10)

6)ஹர்சினி (10)

7) யுவஸ்ரீ(14)

8) ஷிவானி(08)

9) கமலேஷ்(12) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதில் தருண் குமார் என்ற மாணவனுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்ப்டது. ஹரிகுமார் என்ற மாணவனுக்கு உடம்பு வலி உள்ளதாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். மீதி ஏழு மாணவ மாணவியர்களுக்கு வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் .

விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் . பள்ளி பேருந்து விபத்து ஏற்பட்ட செய்தி மாணவ, மாணவியரின் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி பின்பு சிறு காயங்கள் தான் என அறிந்து மன நிம்மதி அடைந்தனர்.

Updated On: 4 April 2024 1:59 PM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமான வாக்குப்பதிவு
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த பெண்...
 3. திருவண்ணாமலை
  சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
 4. ஆரணி
  ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
 5. குமாரபாளையம்
  ஈரோடு நாடாளுமன்ற தொகுதி குமாரபாளையத்தில் 74.06 சதம் ஓட்டுப்பதிவு
 6. இந்தியா
  சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா
 7. லைஃப்ஸ்டைல்
  பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
 8. லைஃப்ஸ்டைல்
  ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
 9. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
 10. ஈரோடு
  பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!