மாணவ, மாணவியர் தேர்வெழுத 8 கூடுதல் தேர்வு மையங்கள்: முனைவர் கண்ணப்பன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வினை விதிமுறைகள் இல்லாமல் நடைபெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு சிறப்பு கண்காணிப்பாளர் கண்ணப்பன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக 8 தேர்வு மையங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது பொதுத்தேர்வு செல்லும் அலுவலர்களுக்கான வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாக அரசு பாடநூல் கழக செயலாளர் காஞ்சிபுரம் மாவட்ட பொது தேர்வு கண்காணிப்பு அலுவலர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் மேல்நிலை வகுப்புகள் மற்றும் பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மைய முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர்கள் வினாத்தாள் மையக்கட்டுப்பாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று காஞ்சிபுரம் அந்தரசன் மேல்நிலைப் பள்ளியில் வழிகாட்டுதல் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றி செல்வி தலைமையில் நடைபெற்றது.
இதில் அரசு பாடநூல் கழக உறுப்பினர் செயலரும் காஞ்சி மாவட்ட பொது தேர்வு கண்காணிப்பு அலுவலர் கண்ணப்பன் கலந்துகொண்டு தேர்வுகள் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி சிறப்பான முறையில் நடத்திடவும் மாணவர்கள் மகிழ்ச்சியான முறையில் தேர்வு எழுத தேவையான பாதுகாப்பான தேர்வு அறைகள், தளவாடப் பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிட உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லுதல் மற்றும் தேர்வு விதிகளை அனைத்து அலுவலர்களும் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களின் பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பொது தேர்வுகள் புகார்கள் இன்றி நடைபெறும் அளவில் ஏற்பாடுகளும், மாணவர்கள் தேர்வுகளை அச்சமின்றி எழுதும் வகையில் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் தேர்வை நேர்மையாக எழுத 100க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் புதியதாக எட்டு தேர்வு மையங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் , வரும் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு அரசு பொது தேர்வினை 13 ஆயிரத்து 114 மாணவ மாணவியர்களும், பிளஸ் டூ பொதுத்தேர்வினை 13 ஆயிரத்து 917 மாணவ மாணவியர்களும் எழுத உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை வள்ளிநாயகம் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர் உதவி இயக்குனர் ராகினி, முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் காந்திராஜன், ஜீவானந்தம் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu