காஞ்சிபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.7 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.7 லட்சம் பறிமுதல்
X

மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட பறிமுதல் பணம் ரூ.7 லட்சம்.

காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை பகுதியில் நடைபெற்ற பறக்கும்படை வாகன சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்து அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட நன்னடத்தை விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பறக்கும் படை அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் அடுத்த அப்பேர்ப்பட்ட பகுதியில் வேளாண்துறை அதிகாரி தேவசேனாதிபதி தலைமையில் காவலர்கள் அரிகிருஷ்ணன் சசிகுமார் உள்ளிட்ட குழுவினர் அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த கட்டுமான நிறுவன ஊழியர் அன்பரசு என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூபாயை 7 லட்சத்தை பறக்கும் படை குழு பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன்பின் இப்பணம் மாநகராட்சி தேர்தல் அலுவலர் நாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு விதிகளின்படி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!