அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன் முறைப்படுத்த 6 மாத கால அவகாசம்

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன் முறைப்படுத்த 6 மாத கால அவகாசம்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

அவ்வகையில் வரும் 01.08.2024 முதல் 31.01.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து, அரசாணை எண் 76, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (நவ(3)) துறை, நாள் 14.06.2018-ல் மாற்றமின்றி அரசு கடிதம் (நிலை) எண் 122/நவ4(1) /2024, நாள் 25.06.2024-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் அரசு கடிதம் எண் 15535/நவ4(3)/2019, நாள் 18.02.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future