/* */

ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை

தலைவரை தாக்கிய வழக்கில் ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை
X

ஆற்பாக்கம் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் 

ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவியை தாக்கிய வழக்கில் ஊராட்சி மன்ற துணைத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்.கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை என காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வாசுதேவன் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்ப்பாக்கம் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செல்வி. ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருப்பவர் விஜயகுமாரி.

ஊராட்சி மன்ற தலைவர் செல்வியின் பணிகளில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயகுமாரி அடிக்கடி தலையீடு செய்வதினால் ஊராட்சி மன்ற பணிகளை செய்ய முடியாமல் செல்வி சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் செல்விக்கும் விஜயகுமாரிக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு உள்ளது.

வாய்த்தகராறாக இருந்தது அடிதடி தகராறு ஆகவும் மாறியதால் ஊராட்சி மன்ற தலைவர் செல்வியும், துணைத் தலைவர் விஜயகுமாரியும் மாறி மாறி ஒருவரும் மீது ஒருவர் குறித்து மாகரல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் விசாரணை செய்த மாகறல் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2ல் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், ஊராட்சி மன்ற தலைவி செல்வியின் தரப்பினர் விஜயகுமாரி மீதான குற்றச்சாட்டுகளை சாட்சியங்கள் மூலம் நிரூபித்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவு பெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -2 நீதிபதி வாசுதேவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவி விஜயகுமாரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இந்திய தண்டனைச் சட்டம் 323 வது பிரிவின் கீழ் விஜயகுமாரியை குற்றவாளியாக தீர்மானித்து அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் மற்றும் ஒரு வழக்கில் ஊராட்சி மன்ற துணை தலைவி விஜயகுமாரியின் குடும்பத்தினர் தூண்டுதல் பேரில் ஆர்ப்பாக்கம் ஐந்தாவது வார்டு பெண் கவுன்சிலர் கலைமணி என்பவரை தாக்கிய வழக்கில் குற்றம் நிரூபணம் ஆனதால் ஊராட்சி மன்ற துணை தலைவியின் உறவினர்களான திலகம் என்கின்ற உதயவன் என்பவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காமல் சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், அவரது மனைவி நந்தினி என்பவருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவி தொடுத்த வழக்கில், ஊராட்சி மன்ற துணைத் தலைவிக்கு தண்டனையும், வார்டு கவுன்சிலர் தொடுத்த வழக்கில் ஊராட்சி மன்ற துணைத் தலைவியின் உறவினர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 5 March 2024 6:30 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
 2. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
 3. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
 4. லைஃப்ஸ்டைல்
  துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
 5. குமாரபாளையம்
  கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
 6. ஈரோடு
  ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
 7. காஞ்சிபுரம்
  அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
 8. காஞ்சிபுரம்
  12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
 9. லைஃப்ஸ்டைல்
  அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
 10. ஈரோடு
  ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...