காஞ்சிபுரம் அருகே கல்வெட்டு பிரச்சினை கலவரமாக மாறியதில் 5 பேர் காயம்

திம்மசமுத்திரம் ஊராட்சியில் கல்வெட்டு அமைப்பது தொடர்பான பிரச்சினையில் காயமடைந்த ஒரு தரப்பினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
Kanchipuram News Today -காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தில் கல்வெட்டு வைப்பது தொடர்பான பிரச்சினையில் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் வீடு புகுந்து தாக்கியதில் தி.மு.க. உறுப்பினர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 5 பேர் பலத்த வெட்டு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக புல்லட் தீனா என்கின்ற தேவேந்திரன் செயல்பட்டு வருகிறார். இக்கிராம ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
இதனை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திறந்து வைக்க இருந்ததால் , அங்கன்வாடி மையத்தில் திறப்பு விழா பெயர் பலகை கல்வெட்டு அமைக்கும்படி எட்டாவது வார்டு உறுப்பினர் பிரியாவின் கணவர் அம்சநாதன் தலைவரிடம் தெரிவித்துள்ளார் . இதன்பின் அங்கன்வாடி மையத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் திறக்கப்பட்டது.
இதன்பின் மூன்று நாட்களுக்குப் பிறகு அம்சநாதன் இரு சக்கர வாகனத்தில் வரும்போது தேவேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வாக்கு வாதம் முற்றி அனைவரும் அம்சநாதனை தாக்கியதில் அம்சநாதன் , காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக அறிந்த தேவேந்திரனின் உறவினர்கள் அனைவரும் கடந்த இரண்டு நாட்களாக அவர் வீட்டில் தங்கி இருந்து , இன்று அம்சநாதன் வீடு திரும்பியது தெரிந்து அம்சநாதனை (வயது 50) மீண்டும் தாக்க வீட்டுக்குள் புகுந்த நிலையில் , குடும்பத்தினர் அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அப்பகுதி சிறிது நேரம் கலவரமாக மாறியதை கண்டு அருகிலிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர்.
இத் தாக்குதலில் அம்சநாதன் அவரது மனைவி பிரியா(37) அவரது மகன் ஹரிவரசு (25), ஹரிவரசின் மனைவி ஆர்த்தி (22), அம்சநாதனின் அக்காள் தேன்மொழி(48) அம்சநாதனின் தம்பி மகன் புகழ்நிதி (11) ஆகியோர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாலு செட்டி காவல் நிலையத்தில் புகார் புறப்பட்டு காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட உறவினர்களை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். சாதாரண கல்வெட்டு விஷயம் கலவரமாகி கத்திகுத்து மற்றும் மண்டை உடைப்பு என பலத்த காயங்களுடன் முடிவடைந்து தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாலு செட்டி காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகை செய்ய இருந்த நிலையில் இதுகுறித்து காவல் ஆய்வாளர் இவர்களை எச்சரித்ததால் அனைவரும் கலைந்து சென்று குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu