தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை சார்பில் 37வது மாபெரும் ரத்ததான முகாம்
ரத்ததானம் அளிக்க வந்த பெண்கள் அதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில் ஏராளமான நபர்கள் ரத்ததானம் செய்தனர்.
தமிழக முழுவதும் சாலை விபத்து உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரத்தம் அதிகளவில் தேவைப்படுவதால் தற்போது ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு அதிகளவில் உருவாகியுள்ளது.
குறிப்பாக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் ரத்த தான முகாம்கள் நடத்தி அரசு மருத்துவமனைகளுக்கு ரத்த நன்கொடை வழங்கி வருகிறது.
காஞ்சிபுரம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை 37வது ரத்ததான முகாமினை இன்று ஒலிமுகமது பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் சர்புதீன் தலைமையில் நடத்தியது.
இந்த ரத்ததான முகாமில் ஏராளமான ஆண்கள் பெண்கள் என கலந்து கொண்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரத்ததான நன்கொடை அளித்தனர்.
இதில் குறிப்பாக காஞ்சிபுரம் போக்குவரத்து தலைமை காவலர் குமார் மற்றும் முகாம் அலுவலக காவலர் ரமேஷ் உள்ளிட்டோர் முகாமில் கலந்துகொண்டு ரத்ததான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த இரு நபர்களும் கடந்த பல ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வருவதும் , விபத்து காலங்களில் ரத்த இழப்பு மற்றும் அதனால் ஏற்படும் பின்னடைவு குறித்து அதிக அளவில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தவ்ஹீத் ஜமாத் காஞ்சிபுரம் கிளை சார்பில் கடந்த ஆண்டு 1480 யூனிட் ரத்தம் சென்னை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த எட்டு மாத காலங்களில் 12க்கும் மேற்பட்ட முகாம்களில் 1020 யூனிட்டுகள் இரத்தம் கொடையாக வழங்கப்பட்டுள்ளதும் அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக பெண்கள் பலர் ரத்ததானம் அளிக்க முன் வந்ததும் சிலருக்கு ரத்தம் குறைவாக இருந்த நிலையில் வருத்தத்துடன் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பரத் முத்த தங்கம், தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணை செயலாளர் அன்சாரி , ஆசிப் மற்றும் கிளை தலைவர் சாகுல் அமீத், செயலாளர் பாசி துணை செயலாளர் அப்துல்லா பொருளாளர் பாசில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu