மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைப்பிற்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இரு சக்கர வாகனம் நல திட்ட உதவியாக ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா ஆகியோரால் வழங்கப்பட்ட போது
காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம் மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 345 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், சின்னிவாக்கம் கிராமம், ரோட்டுத்தெரு என்ற முகவரியில் வசித்து வரும் அஜித் (மாற்றுத்திறனாளி) என்பவர் மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனம் வழங்க மனு அளித்துள்ளதை தொடர்ந்து மனுதாரருக்கு ரூபாய் 83,500/- மதிப்புள்ள மூன்று சக்கர வாகனம் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளி நபருக்கு மூன்று சக்கர சைக்கிள் ரூபாய் 10,00o/- மதிப்பில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, உதவி ஆட்சியர்(பயிற்சி) அர்பித் ஜெயின், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளிடம் மனு அளித்த போது அம்மனுவில் , தாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்காக அவசர தேவைக்காக நிறுத்தப்படும் வாகனத்தில் நான்கு ஊழியர்கள் பணி புரிந்து வருவதாகவும் ஒரு பெண் ஊழியரும் உள்ள நிலையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வரும் நிலையில் தங்களுக்கு உணவு அருந்த மற்றும் கழிப்பிட வசதியின்றி தவித்து வருவதாகவும், குறிப்பாக பெண் ஊழியர் இதில் பெரிதும் அவதி ஒரு நிலையில் தங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏதேனும் ஒரு அறை அமைத்தால் அதில் மருந்து பொருட்கள் வைத்து பராமரிக்கவும் தங்களது தேவைக்கு வசதியாக இருக்கும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu