காஞ்சிபுரம் அருகே 3.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே 3.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட இருவர்.

காஞ்சீபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் மினி லாரிகளில் ரேஷன் அரிசி கடத்திய தொடர்பாக 2 பேர் வாகனங்களுடன் கைது.

காஞ்சீபுரம் அருகே சிறுகாவேரிபாக்கம் பச்சையம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறைக்கு கிடைத்த ரசகிய தகவல் கிடைத்தது.

காவல் துறை இயக்குநர் ஆபாஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையில் போலீசார், சிறுகாவேரிபாக்கம் பச்சையம்மன் கோவில் பின்புறம் சோதனை செய்தனர்.

அங்கு 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு மினி லாரியில் மூட்டை மூட்டையாக மாற்றி கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை பிடித்து மூட்டைகளை சோதனை செய்த போது சுமார் 50 கிலோ எடை கொண்ட 64 மூட்டைகளில் மொத்தம் சுமார் 3200 கிலோ ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய கடத்தியது தெரிந்தது. இதையொட்டி அப்பு (எ) இளங்கோவன் (23), கார்த்தி (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai healthcare technology