செம்பரம்பாக்கம் ஏரியில் புயல் முன்னெச்சரிக்கையாக 3ஆயிரம் கன அடி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் புயல் முன்னெச்சரிக்கையாக  3ஆயிரம் கன அடி நீர் திறப்பு
X

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேறும் காட்சி. 

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பை புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மாலை 5 மணி முதல் 400 கன அடியில் இருந்து 3000 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

தமிழகத்தில் குறைந்த தாழ்வழுத்த மண்டலம், வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த ஒரு வாரங்களாக லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மழையால் , சென்னை குடிநீர் வழங்கல் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து‌ அதிகம் இருப்பதால் ஏரியின் பாதுகாப்பு காரணம் கருதி கடந்த இரு தினங்களுக்கு முன் 200 கன அடி வெளியேற்ற தொடங்கி படிப்படியாக 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேறியது இந்நிலையில் இன்று காலை 11மணியளவில் நீர் வெளியேற்றம் 2ஆயிரம் கன அடி நீர் குறைக்கப்பட்டு 4ஆயிரம் கன அடியாக திறக்கபட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேற்றும் பணியினை ஆய்வு மேற்கொண்டு , அணையின் நீர்வரத்து, வெளியேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் நேற்று முழுவதும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைப்பொழிவு முற்றிலும் குறைவாக காணப்பட்டதால் இன்று காலை முதல் 4000 கன அடியாக குறைக்கப்பட்டது.

மேலும் வரும் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் புயல் கரை கடக்கும் தேதி மாறுபட்ட காரணத்தாலும் காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை பெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது உள்ள நீரின் இருப்பு அதிகமாக உள்ள நிலையை கருத்தில் கொண்டு தற்போது நீர் வெளியேற்றம் 3 ஆயிரம் கன அடி நீர் மாலை ஐந்து மணியிலிருந்து வெளியேற்ற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏரியின் நீர் இருப்பு குறைக்கப்பட்ட பின் அதிக கன மழை பெய்தாலும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story