7வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்: காஞ்சிபுரத்தில் 28,897 பேருக்கு தடுப்பூசி

7வது  மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்: காஞ்சிபுரத்தில் 28,897 பேருக்கு தடுப்பூசி
X

கீழம்பி கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக 28, 897 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஏழாவது மெகா தடுப்பூசி முகாம் 550 இடங்களில் சுமார் 40ஆயிரம் நபர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டு முகாம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி இடைவெளியின்றி செலுத்தப்பட்டது.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணையை 6 லட்சத்து 74 ஆயிரத்து 850 பேரும் இரண்டாம் தவணையை 2 லட்சத்து 40 ஆயிரத்து 281 நபர்களும் செலுத்தி கொண்டுள்ளது நிலையில் நேற்று 28 ஆயிரத்து 897 நபர்கள் செலுத்தி கொண்டுள்ளனர்.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணையை 93% நபர்களும், இரண்டாம் தவணையை 33 சதவீத நபர்களும் செலுத்திக்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!